தட்கல் டிக்கெட் முறைகேடு செய்யும் இணையதள விவகாரம் - பீஹார் இளைஞன் கைது, பகீர் தகவல்கள்
சட்டவிரோதமான இணையதள மென்பொருளை பயன்படுத்தி விரைவாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விற்பனை செய்த பீஹார் மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்
விரைவாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பயன்படுத்திய சட்டவிரோதமான இணையதளம மென்பொருளை விற்ற பீகார் மாநில வாலிபரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். வேலூரில் தனியார் ரயில் தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் கடைகளில் ஐ.ஆர்.சி.டி.சி சாப்ட்வேருக்குள் சென்று விரைவாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து டிக்கெட் விலையை 200 முதல் 500 வரை கூடுதல் விலைக்கு விற்பதாக ரயில் பாதுகாப்பு படை சீனியர் டிவிஷனல் செக்யூரிட்டி கமிஷனர் ராமகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதை அடுத்து அவரது உத்தரவின் பேரில் கடந்த ஜூலை மாதம் ஏழாம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்வே இன்ஸ்பெக்டர் ஆதித்யா குப்தா மற்றும் போலீசார் வேலூரில் சோதனை நடத்தினர்.
அப்போது முறைகேடாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த ஐந்து கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். அதில் இரண்டு கடைகளில் சட்டவிரோதமான மென்பொருளை பயன்படுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றது தெரிய வந்தது.இதை அடுத்து அந்த மென்பொருளை விற்றது யார் என்று ரயில்வே பாதுகாப்பு படை சைபர் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்த சட்டவிரோத மென்பொருளை விற்றது தெரியவந்தது.
இது குறித்து ரயில் பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், திருவண்ணாமலை மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆதித்யா குப்தா, சைபர் செல் சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் உட்பட எட்டு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது .இதை அடுத்து தனிப்படை போலீசார் சட்டவிரோதமாக மென்பொருளை விற்பனை செய்த நபரை பிடிக்க கடந்த ஒன்பதாம் தேதி பீகாருக்கு சென்றனர். 20ஆம் தேதி மென்பொருளை விற்ற பீகார் மாநிலம், தானாபூர் பகுதியைச் சேர்ந்த சைலேஷ் யாதவ் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதை தொடர்ந்து வேலூர் மேஜிஸ்திரிட்டு கோர்ட்டு எண் -1 ல் ஆஐர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:-