வேல் யாத்திரையில் பங்குபெற்ற பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பா.ஜ.க தலைவர்கள் கைது..!

வேல் யாத்திரையில் பங்குபெற்ற பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பா.ஜ.க தலைவர்கள் கைது..!

Update: 2020-11-22 20:39 GMT

கந்தசஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தியவர்களை கண்டித்தும், ஹிந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் தி.க தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், தமிழ்நாட்டில் பா.ஜ.க முருக பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவித்தது. இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.

இருப்பினும் தடையை மீறி கடந்த 6-ந் தேதி திருத்தணியில் வேல் யாத்திரையை மாநில தலைவர் எல்.முருகன் தொடங்கினார். தடையை மீறியதால் அவர் கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களிலும் வேல் யாத்திரை தொடங்குவதும், கைது செய்வதும் நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று திருப்பூரில், அலைகடலென திரண்ட மக்கள் கூட்டத்தில், பா.ஜ.க-வின் வேல் யாத்திரை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன், குஷ்பூ, கார்வேந்தன் உள்ளிட்டவர்கள் பங்குபெற்றனர். 


கூட்டத்தை தொடர்ந்து, பொன் ராதாகிருஷ்ணன், குஷ்பூ, கார்வேந்தன் ஆகியவர்கள் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர். இதனை அடுத்து ட்விட்டரில் பதிவிட்ட குஷ்பூ, வேல் யாத்திரையில் பங்குபெற்றதால் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டதாக பதிவிட்டுள்ளார். எந்த விதமான தடைகளும் வேல் யாத்திரையை தடுக்க முடியாது என்று பதிவிட்ட அவர், திருச்செந்தூர் நோக்கி பயணிப்பதாக தெரிவித்துள்ளார். 

Similar News