ஜீவ சமாதிகள், கிணற்றை காணவில்லை.. திகைத்து நிற்கும் பக்தர்கள்.. சினிமாவை மிஞ்சும் சம்பவம்..

திருவண்ணாமலையில் காட்டு சிவ சுவாமி களுக்கு சொந்தமான நிலம் மெயின் ரோட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு நிலத்தில் 13 ஜீவசமாதிகள் கிடந்த 1984 இல் இருந்து 2022 வரை இருப்பதாகவும் அருகில் ஒரு கிணறும் இருந்ததாக பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இந்த இடத்திற்கு வருகை தந்து ஜீவசமாதி அடைந்த புனிதர்களின் சமாதியில் அமைதியான முறையில் வேண்டி அங்கு இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக அன்னதானத்தை வழங்குவதாக அவர்கள் தரப்பில் குறிப்பிடுகிறது.

ஆனால் தற்போது அவற்றைக் காணவில்லை என்று பக்தர்கள் மீடியாக்களிடம் முறையிட்டு இருக்கிறார்கள். இரவோடு இரவாக 13 ஜீவ சமாதிகள் மற்றும் கிணறு ஆகியவற்றை அகற்றிய அரசு அதிகாரிகள் என்று அங்கு இருக்கும் ஊர் பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக அவர்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. ஹிந்துக்கள் முன்னோர்களை வழிபடுவதையும், அடையாளங்களையும் முற்றிலுமாக அளிக்கப்பட்டதாக அவர்கள் தங்களுடைய வேதனைகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் தங்கள் இங்கு வந்து செய்ய வேண்டிய பணிகளை இனி எப்படி செய்வது? அதற்கு அரசு உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு ஒரு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் தான் இங்கு வந்து இப்படி எல்லாம் செய்திருக்கிறார்கள். எனவே அரசாங்கம் இதற்கு உரிய முறையில் தீர்வை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News