மத்திய அரசின் திட்டங்கள் தமிழக அரசின் அலட்சியத்தால் தமிழக மக்களை முழுமையாக சென்றடையவில்லை - வானதி சீனிவாசன்!
தமிழக அரசின் மெத்தன போக்கால் மத்திய அரசு திட்டங்களின் பலன் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் கோபூஜை , கஜபூஜை செய்து வழிபட்ட பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
மயிலாடுதுறை தரங்கம்பாடி ரயில் சேவை மீண்டும் இயக்குவதற்கு மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனுவை கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வருகிறார். ஆனாலும் காவிரி நீர் கிடைக்காமல் பருவமழை பொய்த்து போவதால் விவசாயிகள் கடுமையான துயரத்திற்கு உள்ளாகி உள்ளனர். இவர்களுடைய நலனை பாதுகாக்க வேண்டும் என்றால் நானும் டெல்டாக்காரன் என்று சொல்லும் தமிழக முதலமைச்சர் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்.
அதை விடுத்து சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் அறிக்கை விடுத்து ஏமாற்றக்கூடாது. பயிர் காப்பீடு திட்டத்தில் பிரதமர் முன்னுரிமை கொடுத்தாலும் மாநில அரசு பயிர் காப்பீட்டில் தன் பங்கை செலுத்தாததால் விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை. மாநில அரசின் மெத்தன போக்கினால் மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள் மக்களை முழுமையாக சென்றடையவில்ல. இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI