கிறிஸ்தவர் இந்து சமய அறநிலையத் துறையின் ஊழியரா.. ஸ்டேட்டஸ் வீடியோ என்ன..
சேலம் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் சின்ன மாரியம்மன் கோவில், குப்புசாமி பட்டி எல்லையில் அமைந்திருக்கும் கோதண்ட ராமர் ஆகிய கோவில்களில் அதிகாரியாக சங்கர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரியாக செயலாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவருடைய போன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ல் சமீபத்தில் இயேசு படம் இருந்தது. இதை பார்த்து சக அலுவல அதிகாரிகள், பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மதம் மாறி விட்டாரா? என்று சிலர் சந்தேகத்தை கிளப்பினர்.
இது குறித்து அந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கூறுகையில், "இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரிவோர் இந்துவாக இருக்க வேண்டும் என்பது விதி. கோவிலில் பணியாற்றும் இவர் இது போல ஸ்டேட்டஸ் படம் வைப்பதால் கோவிலில் எவ்வாறு செயல்படுவார் என்ற கேள்வி எழுகிறது என்றனர். உண்மையில் அங்கு இருக்கும் விதிகளின்படி இந்து சமய அறநிலையத்துறையின் ஊழியராக இருப்பவர் கிறிஸ்தவராக இருக்கக் கூடாது மற்றும் மதமாற்றம் செய்திருக்கக் கூடாது என்பது நிபந்தனை. ஆனால் அதனை பின்பற்றாமல் இவர் இப்படிப்பட்ட ஸ்டேட்டஸை வைத்தித்திருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்து முன்னணியின் சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் கூறியதாவது, கிரிப்டோ கிறிஸ்துவர்கள் என்று சொல்லப்படும் ஹிந்து மதத்தில் இருந்து மதம் மாறி வெளியே சென்றவர்கள் ஹிந்து சமய அறநிலையத்துறைக்குள் ஊடுருவியுள்ளனர். அந்த மாதிரியாக தான் தற்போது நடைபெற்று இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News