மின்சார கட்டணத்தை உயர்த்தி தொழில் நிறுவனங்களை முடக்கும் அரசு! மத்திய இணைஅமைச்சர் குற்றச்சாட்டு!

Update: 2023-11-18 04:04 GMT

சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல் முருகன், உள்கட்டமைப்பு வளர்ச்சியை அனைத்து துறைகளிலும் ஒன்றிணைக்கும் பிரதமரின் கதி சக்தி திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றும் இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக கொரோனா காலகட்டத்திலும் கூட எம் எஸ் எம் இ நிறுவனங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மூன்று லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. உலகின் மற்ற நாடுகள் அனைத்தும் பிரச்சினைகளை சந்தித்த பொழுது நமது நாட்டில் பிரச்சனைகள் இன்றி அவர்கள் வேலை பார்த்தார்கள்! 


ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் தொழிலை முடக்குவது தான் அவர்களது குறிக்கோளாக இருக்கிறது அதனால் தான் மின்சார கட்டணம் பல மடங்கு கிட்டத்தட்ட 40 முதல் 50 மடங்கு உயர்த்திருக்கிறார்கள். இந்த மின்சார கட்டண உயர்வால் பல தொழில் நிறுவனங்கள் மூட வேண்டிய சூழலை சந்தித்து இருக்கிறது!! தொழில் நிறுவனங்களின் மின்சார கட்டணத்தை குறைப்பதோடு மட்டுமில்லாமல் வீடுகளுக்கும் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் "எங்கள் வீட்டிற்கு இதுவரை மூவாயிரம் ரூபாய் மின்சார கட்டணம் வந்து கொண்டிருந்தது ஆனால் தற்பொழுது பத்தாயிரம் ரூபாய் வருகிறது", இது ஏழை மக்களையும் பாதிக்கிறது அதனால் தமிழக அரசாங்கம் மின்கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 

Source : Polimer News

Similar News