மோடிக்காக 1 லட்சம் காவி பலூன் பறக்கவிட ஏற்பாடு செய்த பா.ஜ.க - தடை விதித்த தமிழக அரசு
பிரதமர் மோடி வருகையை ஒட்டி காவி பலூன் பறக்கவிட நடவடிக்கை எடுத்த பா.ஜ.க'வின் திட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பிரதமர் மோடி வருகையை ஒட்டி காவி பலூன் பறக்கவிட நடவடிக்கை எடுத்த பா.ஜ.க'வின் திட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இன்று தமிழகம் வரவிருக்கும் பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பா.ஜ.க சார்பில் 'வணக்கம் மோடி! வாங்க மோடி' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் மோடியை வரவேற்கும் விதமாக காவி நிற பலூன் பறக்கவிடும் திட்டம் இருந்தது, சென்னை பட்டினப்பாக்கத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருவதை தொடர்ந்து தமிழக பா.ஜ.க சார்பில் இந்த பலூன்கள் பறக்க வைக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொண்டு பலூன்களை பறக்க வைப்பதாக திட்டம், இந்நிலையில் பாதுகாப்பை காரணம் காண்பித்து தமிழக அரசு இந்த நிகழ்ச்சியை ரத்து செய்த காரணத்தினால் அண்ணாமலை இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுகுறித்து பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் கூறுகையில் வாங்க வணக்கம் மோடி என்ற வாசகம் பதித்த பலூன்களை பறக்க விட ஏற்பாடு செய்தோம், சில பாதுகாப்பு காரணங்களுக்காக விட முடியவில்லை ஒரு லட்சம் பலூன்களை தயார் செய்து வைத்திருந்த நிலையில் தற்போது முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனை அப்படியேதான் வைத்திருக்கப் போகிறோம்' என்றார்.