BOYCOTT சீன பொருட்கள் - இந்தியாவில் வலுக்கும் எதிர்ப்பால் வர்த்தகத்தை இழக்குமா சீனா?

BOYCOTT சீன பொருட்கள் - இந்தியாவில் வலுக்கும் எதிர்ப்பால் வர்த்தகத்தை இழக்குமா சீனா?

Update: 2020-06-17 06:53 GMT

லடாக்கில் கல்வான் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் கற்கள், கம்பியால் தாக்கினர். இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீன ராணுவத்தினர் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அமெரிக்க பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தியை கேள்விப்பட்ட இந்திய குடிமக்கள் தங்களது எதிர்ப்புகளை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

அதாவது பாய்கட் என்ற வாசகத்தை சமூக வலைதளங்களில் அனைவரும் ஷேர் செய்து வருகின்றனர். அதாவது சீனா தனது வர்த்தகத்தை அதிகளவு இந்தியாவில் நடத்தி வருகின்றது. மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாகத்தான் சீனா கப்பல்கள் சென்று வருகிறது. இதனை தடை செய்தாலே சீனாவின் கொட்டம் அடங்கிவிடும் என்று இந்தியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனவே இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தியை கேள்விப்பட்ட பின்னர் பாய்கட் சீன பொருட்கள் என்று தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்தியாவில், சீனா தனது வர்த்தகத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Similar News