இந்துக் கடவுள் கிருஷ்ணரை அவமதிக்கும் நெட்ஃபிலிக்ஸ் - கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.! #BoycottNetflix #OTT #HinduPhobhia

இந்துக் கடவுள் கிருஷ்ணரை அவமதிக்கும் நெட்ஃபிலிக்ஸ் - கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.! #BoycottNetflix #OTT #HinduPhobhia

Update: 2020-06-29 11:23 GMT

சினிமாகாரர்களை மட்டும் இது வரை பாதித்து வந்த இந்துபோபியா வைரஸ் இப்போது நெட்ப்லிக்ஸ் போன்ற OTT வலைத்தளங்களையும் பாதித்துள்ளதாகத் தெரிகிறது. இந்து தர்மத்தை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இழிவுபடுத்த அனைத்து தொழில்களிலும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சி உள்ளது எனக் குற்றம் சாட்டப்படுகிறது.

ஜீ 5 இன் சர்ச்சைக்குரிய, பிராமணரைத் தாக்கும் தமிழ் வலைத் தொடரான ​​'காட்மேன்' பற்றி கதிர் செய்திகள் இதற்கு முன்பு செய்தி வெளியிட்டது, இந்தத் தொடர், சமூக ஊடகங்களின் எதிர்ப்பால் இறுதியில் நிறுத்தப்பட்டது. நெட்ஃபிலிக்ஸ், 'சேக்ரட் கேம்ஸ்', 'கோல்' மற்றும் 'லீலா' போன்ற நிகழ்ச்சிகளுடன் இந்துபோபியாவை அள்ளித் தெளிப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த நேரத்தில் பகவான் கிருஷ்ணரை நேரடியாக தாக்கும் நிகழ்ச்சிகளுக்கு நெட்ஃபிலிக்ஸ் தன் தளத்தை வழங்கியுள்ளது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முதலாவது நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் படமான புல்பூல், இதைத் தயாரித்தது வேறு யாரும் இல்லை, 'பாட்டல் லோக்' புகழ் அனுஷ்கா ஷர்மா தான். அவர் இந்துபோபியாவை ஊக்குவிப்பதற்காக ஒரு முடிவுடன் அதை எடுத்தது போல் இருந்தது. தகவல்களின்படி, ஷா அப்துல் கரீம் என்பவர் எழுதிய பெங்காலி பாடல் ஒன்று புல்பூலில் உள்ளது. இந்த பாடலில், கரீம் , கன்ஹா (கன்ஹா அல்லது கன்ஹையா என்பது ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவரது பக்தர்களால் பயன்படுத்தப்படும் அன்பான பெயர்) பகவானை, ஆங்கிலத்தில் Bastard என்று பொருள்படும் வகையில் 'ஹரம்சதா' என்றும் மேலும் தேவி ராதாவை 'கலங்கினி' (கள்ளத் தொடர்புகளில் ஈடுபடுபவர்) என்று கேவலமான சொற்களையும் துஷ்பிரயோகங்களையும் பயன்படுத்தியுள்ளார். 


அனுஷ்கா ஷர்மாவின் தயாரிப்பு நிறுவனமான 'க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸில்' 'பாட்டல் லோக்' மூலம் இந்து தர்மத்தை மோசமான முறையில் சித்தரித்த பின்னர், இந்துக் கடவுள்களை மீண்டும் மீண்டும் வசைபாடி இந்துபோபியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

சமீபத்தில் நெட்ஃபிலிக்ஸில் வெளியான இரண்டாவது இந்துபோபிக் படம், ரவிகாந்த் பெரேப்பு இயக்கிய தெலுங்கு படமான 'கிருஷ்ணா மற்றும் அவரது லீலா'. இதை பாகுபலி புகழ் ராணா டகுபதி தயாரித்துள்ளார். 


இந்தப்படம், அதன் பெயர் மற்றும் கதைக்கான ஈர்ப்பை ஹிந்து இதிகாசங்களில் இருந்து பெறுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், படம் எடுப்பவர்களுக்கு புனிதமான ஹிந்துக் கதைகள் காதல்-காமெடிப் படம் எடுக்க உதவுவதைத் தவிர வேறொன்றும் இல்லை. இப்படத்தில் கிருஷ்ணா என்ற பெயருடைய ஹீரோவும், அவரது பல பெண் தோழிகளும் (அதில் ஒருவர் பெயர் ராதா) இணைந்த கதையில் பல பாலியல் ரீதியான காட்சிகளும் உள்ளன.!

முன்னணி நடிகர் சித்து ஜொன்னலகடாவுடன் இணைந்து இக்கதையை எழுதிய இயக்குனர் ரவிகாந்த் பெரேபுவை திரையுலகம் பாராட்டுவதில் பிஸியாக இருக்கும்போது, ​​இந்துபோபியாவை ஊக்குவிப்பதில் தயாரிப்பாளர்கள் எவ்வாறு நுட்பமாகவும் இரகசியமாகவும் இருந்தார்கள் என்பதை இது காட்டுகிறது. அவர்கள் ருக்மினியை ருக்ஸராக மாற்றியுள்ளனர். இவை அனைத்தும் படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் செய்யப்பட்டுள்ளன. சில பார்வையாளர்கள் இதைக் கற்பனைக் கதைகளாக மட்டுமே பார்க்கக்கூடும், ஆனால் இதுபோன்ற நுட்பமான செய்திகள் செலுத்துவது உளவியல் மட்டத்தில் செயல்படுகிறது.

சமூகப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவது ஒரு விஷயம், அது கூட உணர்திறனுடன் செய்யப்பட வேண்டும், ஆனால் நம் கடவுள்கள் மீதான வெட்கக்கேடான தாக்குதல்களை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

படக்காட்சிகள் ஒரு நீடித்த பாதிப்பை விட்டுச்செல்லும் என்பதால், திரைப்படங்கள் அனுப்பும் செய்திகளைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்து தர்மத்தை 'படைப்பு சுதந்திரம்' அல்லது 'சுயவிமர்சனம் செய்பவர்' என்ற பெயரில் கேலி செய்ய முடியாது. இந்துபோபியா இல்லாமல் ஒருவரின் படைப்பாற்றலை வெளிப்படுத்த போதுமான கதைகள் உள்ளன.

நமது கடவுள்கள் மற்றும் தர்மத்தின் மீதான இத்தகைய அப்பட்டமான தாக்குதல்களை இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்ற தெளிவான செய்தியுடன் இந்துக்கள் பதிலளிக்க வேண்டும். 

Translated From : Hindu Post

Similar News