கோவில்களில் தொடரும் திருட்டு- அலட்சியம் காட்டும் அறநிலையத்துறை !
Breaking News.
உளுந்தூர்பேட்டையில் அம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த ஒரு பவுன் தங்க தாலியை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அய்யனார் பச்சைவாழி அம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளனர்.
மறுநாள் காலை வழக்கம்போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மன் கழுத்தில் இருந்த தாலி காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை திருடியவர்களைத் தேடி வருகின்றனர். அம்மன் கழுத்தில் இருந்த தங்கத் தாலி காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் உண்டியல் மற்றும் சிலை திருட்டு ஆகியவற்றை தடுப்பதற்கு தமிழக அரசு அனைத்துக் கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் இதுவரை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Source : MAALAIMALAR