இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு புதிய விசா பிரிவு-மத்திய அரசு முடிவு !
இந்துக்களையும் சீக்கியர்களையும் விரைவாக இந்தியா கொண்டு வருவதற்காக 'இ –எமர்ஜென்ஸி எக்ஸ் மிசேலேனியஸ்' என்ற புதிய விசா பிரிவை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிமுகப்படுத்தியது.
ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை மீட்பதற்காக புதிய விசா பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 150 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியவுடன் அங்குள்ள சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதுவரை 150 இந்தியர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இந்தியர்களையும் மீட்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை மீட்பதற்காக புதிய விசா பிரிவு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 15ஆம் தேதி காபூலில் இருந்து சுமார் 200 இந்தியர்களும், 16-ம் தேதி 45 இந்தியர்களும் விமானத்தில் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சி-17 என்ற இந்திய விமானப்படையின் விமானம் மூலம் 150 இந்தியர்கள் காபுலில் இருந்து குஜராத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டனர்.பிறகு அங்கிருந்து அவர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர தாண்டனும் இந்தியா திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அவசர ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் மத சிறுபான்மையினர்களாக இருக்கும் இந்துக்களையும் சீக்கியர்களையும் விரைவாக இந்தியா கொண்டு வருவதற்காக 'இ –எமர்ஜென்ஸி எக்ஸ் மிசேலேனியஸ்' என்ற புதிய விசா பிரிவை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிமுகப்படுத்தியது.
இந்த சேவையை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தாலே போதுமானது. ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் டெல்லியில் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் சிறுபான்மையினரை இந்தியா கொண்டுவருவதற்காக மத்திய அரசு புதிய விசா பிரிவை உருவாக்கியுள்ளதை தொடர்ந்து அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்கள் இந்தியா திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Source : Tamil Hindu
IMAGE COURTESY : The Indian Express