இளைஞர்களிடம் அத்துமீறிய பாதிரியார்-நடவடிக்கை எடுக்காத சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகம்!

Breaking News

Update: 2021-08-15 00:15 GMT

போதகர் பயிற்சி வகுப்புக்கு வந்த இளைஞரிடம் ஆபாசக் கதைகள்ர கூறியும் ஓரினச்சேர்க்கையில் பாதிரியார் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் மதுரை சிஎஸ்ஐ சர்ச்சில் நடந்தேறியுள்ளது.

மதுரை நரிமேடு பகுதியில் சிஎஸ்ஐ திருச்சபைக்கு சொந்தமாக கதீட்ரல் சர்ச் உள்ளது. அந்த சபையில் பாதிரியாராக இருந்து தற்போது சிவகாசி மேற்கு சபையில் பணிபுரிந்து வரும் டேவிட் ஜெபராஜ் என்பவர் இளைஞர்களுக்கு போதகர் பயிற்சி அளிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார். அந்த இளைஞர் முதலில் மதுரையில் உள்ள கத்தீட்ரல் சர்ச்சுக்கு பெற்றோருடன் சென்று வந்துள்ளார். பிறகு பாதிரியார் டேவிட் ஜெபராஜ் அந்த இளைஞரிடம் தொடர்புகொண்டு போதகர் பயிற்சி வகுப்பிற்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அந்த இளைஞருக்கு போதகர் பயிற்சியில் சேர்வதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்த உடன் அவரது பெற்றோர்களிடம் அந்த இளைஞரை பெண்களுடன் தொடர்புபடுத்தி தவறாக பேசியுள்ளார். மேலும் போதகர் பயிற்சி வகுப்பிற்கு வந்தால் மட்டுமே உங்களது பையன் நல்ல நிலைக்கு வருவான் என்று கூறி அந்த இளைஞரை பயிற்சி வகுப்புக்கு வருவதற்கு வற்புறுத்தியுள்ளார்.

பெற்றோரும் பாதிரியாரின் பொய்யை நம்பி அந்த இளைஞரை போதகர் பயிற்சி வகுப்பில் சேர்த்துள்ளனர். சேர்ந்த ஒரு வாரத்திலேயே டேவிட் ஜெபராஜ் அந்த இளைஞரிடம் இரவு நேரத்தில் ஆபாசக் கதைகளை பேசத் தொடங்கியுள்ளார். மேலும் அந்த இளைஞர் தூங்கும்போது அந்தரங்க இடங்களில் கை வைத்துள்ளார். அதுபற்றி கேட்டால் சும்மா செக் பண்ண தான் கை வைத்தேன் என்று தெரிவித்துள்ளார். பிறகு சிறிது நாள் கழித்து தான் டேவிட் ஜெபராஜ் ஓரின சேர்க்கையில் படு மோசம் என்று அந்த இளைஞருக்கு தெரியவந்துள்ளது.

எனவே அந்த பயிற்சி வகுப்பில் இருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டுமென்று இது குறித்து அங்குள்ள சிலரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களோ பணத்திற்காக அந்த இளைஞர் அவர் பொய் கூறுகிறார் என்று நம்ப மறுத்துள்ளனர். பின்னர் ஒருநாள் அந்த ஆபாச பாதிரியார் ஆபாச கதையைப் பேசும்போது அதை ரெக்கார்ட் செய்து அந்த டேப்பில் உள்ள ஆடியோவை ஆதாரமாக வைத்துக்கொண்டு பேராயரிடம் புகார் அளித்துள்ளார். அவர்களோ அந்த பாதிரியார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த பாதிரியாரை மதுரையிலிருந்து சிவகாசி சபைக்கு மாற்றியுள்ளனர்.

மேலும் பயிற்சிக்கு வந்த அந்த இளைஞருக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் தவறு செய்த டேவிட் ஜெபராஜ் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து மதுரை சிஎஸ்ஐ திருச்சபை பேராயர் ஜோசப்பை தொடர்புகொள்ள அந்த பத்திரிகை முயற்சி செய்தபோது அவர் எந்த விளக்கமும் தரவில்லை என்றும் குமுதம் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Source :

Tags:    

Similar News