கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது - கொலை மிரட்டல் விடுத்ததால் நடவடிக்கை !
ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் பரோடா எனும் கிராமத்தில் வசித்து வரும் மனோஜ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் கட்டாயப்படுத்தி மதம் மாற்றி மாட்டிறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் பரோடா எனும் கிராமத்தில் வசித்து வரும் மனோஜ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் கடந்த 2020ஆம் ஆண்டு சலம்பா எனும் கிராமத்தில் வசித்து வரும் அபுபக்கர், மாஸ்டர் சோராப், மவுலானா தில்ஷாத், முபின் மற்றும் அவர்களது கூட்டாளிகள் பணம் மற்றும் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி மனோஜை மதம் மாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் மதம் மாறிய பின் அவருக்கு பேசியதை விட குறைவான பணத்தை கொடுத்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து மேவாட் பகுதியில் இருந்து பணம் மற்றும் தானியங்களைச் சேகரிக்க வலியுறுத்தியுள்ளனர். பின்னர் அவரை மாட்டு இறைச்சி சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். அவர்கள் தவாத்-இ-இஸ்லாம் மற்றும் குளோபல் பீஸ் சென்டர் ஆகிய இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வந்தனர் என்பதை தெரிந்துகொண்ட மனோஜ் அவர்களிடமிருந்து தப்பித்து மீண்டும் தாய் மதத்திற்கு திரும்ப முடிவு செய்தார். ஆனால் அவர்கள் மனோஜை கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த மனோஜ் கொலை மிரட்டல் விடுத்த அபுபக்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : The tribune