இலக்கை நோக்கி முன்னேறி செல்லும் இந்தியா-எதில் தெரியுமா?
India On a Mission.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வேகமாக செலுத்தி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிய தொடங்கியவுடன் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு முடுக்கி விட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பாக இலவசமாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. மத்திய அரசின் தீவிர முயற்சியால் இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை 60.38 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 80,40,407 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்தி முடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதனை நிறைவேற்றும் விதமாக அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி அனுப்பி வைத்து அனைத்து மக்களுக்கும் இலவசமாக மத்திய அரசு செலுத்தி வருகிறது.
இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.63 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.35 சதவீதமாகவும், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1.02 சதவீதமாகவும் உள்ளது என்று மத்திய அரச சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamalar