மீண்டும் மூடப்படும் கோவில்-ஆவணி திருவிழாவிற்கும் அனுமதி இல்லை!

Breaking News

Update: 2021-08-27 10:50 GMT

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை தற்போது கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டம்பரில் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது ஆவணி மாதம் என்பதால் கோவில்களில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இதற்கு பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்று காரணம் கூறி நாளை முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆவணி திருவிழாவை பக்தர்கள் தொலைக்காட்சியில் நேரலையாகவோ அல்லது யூடியூப் வாயிலாகவோ வீட்டிலிருந்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆடி மாதம் நடைபெறும் திருவிழாவிற்கும் அனுமதி அளிக்காத நிலையில் தற்போது ஆவணி மாத திருவிழாவிற்கும் தடைவிதித்துள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை காரணம்காட்டி ஏற்கனவே கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மூடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது திருவிழாவிற்கும் அரசு தடை விதித்திருப்பது வேதனை அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.


Source : தினமணி

Tags:    

Similar News