தெருவில் நின்று வழிபட கூட உரிமை இல்லையா- அரசின் கெடுபிடியால் தவிக்கும் பக்தர்கள் !
Breaking News.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கோவில்களில் பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கூடாது என்று அரசு தெரிவித்துள்ளதால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். நேற்று பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டிருந்ததால் பக்தர்கள் கோபுர நுழைவாயிலில் நின்று கற்பூரம் மற்றும் விளக்கேற்றி வழிபட்டனர்.
இதேபோல் ஆவணி வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு நின்று வழிபாடு செய்தனர். கொரானா தொற்று கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் உள்ள கோவில்கள் மூன்று நாட்கள் மூடப்பட்டு உள்ளதால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கு அனுமதி அளித்ததை போல் கோவில்களையும் கொரோனா நோய்தொற்று கட்டுப்பாடுகளுடன் திறக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிமகன்கள் முண்டியடித்துக் கொண்டு நிற்கும் டாஸ்மாக் கடைகளையும் கூட்டம் கூடும் திரையரங்குகளையும் திறக்க அனுமதி அளித்துள்ள அரசு கோவில்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது நியாயமற்றது என்று சமூக வலைதளங்களில் பலர் பதிவு செய்து வருகின்றனர். திமுக அரசு கோவில்களின் முன் பக்தர்கள் சாலையில் நின்று தரிசனம் செய்வதையும் தடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
Source : MAALAIMALAR