தடையை மீறி ஜெபக் கூட்டம்- கோவில்களை பூட்டிய அரசு இதைக் கண்டுகொள்ளாதது ஏன்?

காவல்துறையினர் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-10 00:15 GMT

மதுரையில் கொரோனா தடையை மீறி ஜெபக்கூட்டம் நடத்திய மிஷனரிகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.





தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்பு இருப்பதால் இந்து வழிபாட்டு தலங்கள் அனைத்தும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. மேலும் ஆடி அமாவாசையன்று ஆற்றங்கரை, கடற்கரை, குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் இந்துக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்துக்கள் பண்டிகைக்கு மட்டும் தடை விதித்து விட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெபக் கூட்டங்கள் நடத்துவதை அரசு வேடிக்கை பார்த்து வந்தது. அதேபோல் வெள்ளிக்கிழமைகளில் கூடும் இஸ்லாமிய பொதுக் கூட்டங்களுக்கும் எந்த ஒரு தடையும் விதிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் மதுரையில் கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி ஜெபக் கூட்டங்கள் நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது.

இதனை தொடர்ந்து காவல் துறையினர் நேதாஜி ரோடு அருகே உள்ள சந்தில் சென்று பார்த்தபோது கொரோனா விதிமுறைகளை மீறி காவல்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு ஜெபக் கூட்டங்கள் நடைபெறுவது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் அங்கு சென்று ஜெபக் கூட்டங்கள் நடத்தியவர்களிடம் விசாரணை மேற்கொண்டு ஜெப கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து தடையை மீறி ஜெபக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஆலய நிர்வாகிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடி கிருத்திகை என்று விசேஷ நாட்களில் கோவில்களை மட்டும் பூட்டிவிட்டு மசூதிகளிலும் சர்ச்சைகளிலும் கூட்டம் கூட அனுமதிப்பது இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் என்பது இந்துக்களுக்கு மட்டும் என்றில்லாமல் அனைத்து சமூகத்தினரும் கடைபிடிக்க வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

Source : Thanthi டிவி


Image courtesy : Dinamalar

Tags:    

Similar News