“அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது” - நிர்மலா சீதாராமன் பேட்டி !!

“அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது” - நிர்மலா சீதாராமன் பேட்டி !!

Update: 2019-07-05 13:29 GMT


மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் நிர்மலா சீதாராமன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசுக்கான சவால்களை நாங்கள் சந்தித்து உள்ளோம். நீண்ட கால இலக்குகள் பட்ஜெட்டில் பிரதிபலிக்கின்றன. 5 ஆண்டு கால இலக்குடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. மக்கள் எளிதான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இலக்கை அடைவதற்கான கொள்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. 


பட்ஜெட்டில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் கவனம் செலுததப்பட்டுள்ளனர். வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களை ஆய்வு செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது. 


இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். 



Similar News