ஆன்லைன் பணபரிமாற்ற கட்டணம் ரத்து! பிற ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணமும் ரத்தாகிறது!!

ஆன்லைன் பணபரிமாற்ற கட்டணம் ரத்து! பிற ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணமும் ரத்தாகிறது!!

Update: 2019-06-06 10:05 GMT


பாராளுமன்ற தேர்தல் முடிந்து நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிநிலைக் கூட்டம் மூன்று நாட்களாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: -


ரெப்போ வட்டி வகிதம் 6 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ ரேட் எனப்படும் வங்கிகளுக்கான வட்டி விகிதமும் 6 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி வகிதம் குறைக்கப்பட்டதன் மூலம் வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் மீதான வட்டி வகிதம் குறையும்.  


நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு இது 7.2 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது. பணவீக்கம் முதல் காலாண்டில் 3 முதல் 3.1 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 3.4 முதல் 3.7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நிதிக் கொள்கைளையும் மக்களுக்கு பயன் உள்ளதாக மாற்ற ரிசவர் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஆன்லைன் பணபரிவர்த்தனை தொடர்பான நெப்ட் (NEFT), (ஆர்டிஜிஎஸ்) RTGS போன்றவைகளுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி, அறிவுறுத்தி உள்ளது. மேலும் பிற ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் தொடர்பாக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குள் இதன் முதல் கூட்டம் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பிற ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. எனவே அதனை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இப்போது அது தொடர்பாக ரிசர்வ் வங்கி குழு அமைத்துள்ளது. எனவே பிற ஏடிஎம்களில் பணம் எடுப்தற்கான கட்டணம் விரைவில் ரத்தாகும் என தெரிகிறது.


Similar News