வைகோவிற்கு டாட்டா! தி.மு.க சார்பில் ராஜ்யசபாவிற்கு மாற்று வேட்பாளர்!

வைகோவிற்கு டாட்டா! தி.மு.க சார்பில் ராஜ்யசபாவிற்கு மாற்று வேட்பாளர்!

Update: 2019-07-08 06:40 GMT

தி.மு.க கூட்டணி சார்பில் 2 பேர் ராஜ்யசபா வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்துள்ளனர் இந்த நிலையில், மேலும் ஒருவரை வேட்பாளராக்க முடிவு செய்துள்ளது. திமுக தலைமை
தமிழகத்தில், வரும் ஜூலை 18 ல், ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது . அ.தி.மு.க தரப்பில் 3 எம்.பிகளும் , திமுக சார்பில் 3 எம்.பிகளும் வெற்றிபெற வாய்ப்புள்ளது இந்த நிலையில், திமுக சார்பில் 2 பேரும், ஒப்பந்தப்படி மதிமுக சார்பில் வைகோவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.


அ.திமு.க சார்பில் 2 பேரும், தேர்தல் ஒப்பந்தப்படி பா.ம.க., சார்பில் அன்புமணியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். , தேசதுரோக வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள தி.மு.க கூட்டணி வேட்பாளர் வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதை எதிர்கொள்வதற்காக, திமுக சார்பில் மேலும் ஒரு வேட்பாளரை களமிறக்க தி.மு.க முடிவு செய்தது.
கூடுதல் வேட்பாளராக, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தி.மு.க வின் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல்  செய்தார்.  .இன்று மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். நாளை வேட்பு மனு பரிசீலனை தொடங்க உள்ளது.
அவ்வாறு வைகோவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் ம.தி.மு.க வில் இருக்கும் ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பை வழங்க வேண்டும். அனால் தி.மு.க வேட்பாளரை களமிறக்குவது ம.தி.மு.க வினரை கொதிப்படைய செய்துள்ளது. இதன் மூலம் ம.தி.மு.க வை தி.மு.க ஓரங்ககட்டுகிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


வரும் 11 ம் தேதி வரையில் வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம்.


Similar News