மோடி அரசு நிறைவேற்றிய சட்ட திருத்தத்துக்கு கேப்டன் மனமார்ந்த நன்றி!

மோடி அரசு நிறைவேற்றிய சட்ட திருத்தத்துக்கு கேப்டன் மனமார்ந்த நன்றி!

Update: 2019-08-04 13:43 GMT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:  கோவையில் கடந்த 2010ம் ஆண்டு தனியார் பள்ளியில் பயின்ற சிறுமி முஸ்கான், சிறுவன் ரித்திக் இரண்டு குழந்தைகளையும் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலையும் செய்யப்பட்டனர். இதில் அந்த பள்ளி வாகன ஓட்டுனர் மோகன்ராஜ், மனோகரன் இருவரும் போலீசில் சிக்கினர், அப்பொழுது காவல்துறையை மீறி தப்பியோடிய மோகன்ராஜ் என்கவுண்டரில் சுட்டுக்கொள்ளப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்த வாகன ஓட்டுனர் மனோகரன் என்பவருக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி இருக்கிறது வரவேற்கத்தக்கது.


இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எங்கும் நடக்காத வண்ணம் போக்சோ சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு மத்திய அரசுக்கு தேமுதிக சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை ஒன்றுதான் உரிய தீர்வு. இவ்வாறு கூறியுள்ளார்.


Similar News