இளைஞர் சக்தியை கொண்டாடும் மத்திய அரசு- தேசிய படைப்பாளர் விருது அறிவிப்பு!

இளைஞர்கள் தான் நாட்டின் தூண்கள் என்று இளைஞர் சக்தியை மத்திய அரசு கொண்டாடி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இளம் படைப்பாளர்களுக்கான விருது ஒன்றையும் மத்திய அரசு அறிவித்துள்ளது

Update: 2024-02-12 05:15 GMT

சமூக ஊடக படைப்பாளர்களுக்கு தேசிய விருது வழங்கும் முன்னெடுப்பை பாராட்டிய பிரதமர் மோடி,  இளைஞர் சக்தியை மத்திய அரசு கொண்டாடுகிறது என்று பெருமிதம் தெரிவித்தார். Youtube ,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளர்களின் திறமை மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு 'தேசிய படைப்பாளர் விருது' வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு அரசின் 'Mygovindia' இந்தியா வலைதளத்தில் வெளியானது. அதில் 20 பிரிவுகளின் கீழ் விருதுக்கான பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன. இளம் சமூக ஊடக படைப்பாளர்கள் தங்களது பெயர்களை நேரடியாக பரிந்துரைக்கலாம். அல்லது இதர பயனாளர்கள் தங்களது விருப்பத்துக்குரிய படைப்பாளரின் பெயரை பரிந்துரைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை x வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார் .

அதில் "நாடு முழுவதும் உள்ள திறமை மிக்க படைப்பாளர் சமூகத்துக்கான மிகப்பெரிய வாய்ப்பு இது. புதுமைகளை புகுத்துதல், உத்வேக மூட்டுதல் ,நல்ல மாற்றங்களை தூண்டுதல் என இளம் படைப்பாளர்களின் பங்களிப்பை கொண்டாட விரும்புகிறோம். திறமையான படைப்பாளர்களை தேசம் உற்சாகப்படுத்தட்டும்" என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

SOURCE :Dinamani

Similar News