ஊரடங்கு நாட்கள் குறித்து மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு சொன்ன யோசனை..

ஊரடங்கு நாட்கள் குறித்து மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு சொன்ன யோசனை..

Update: 2020-04-02 03:12 GMT

ஊரடங்கு எத்தனை நாட்களுக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்:

கொரோனா வைரசால் இத்தாலி நாட்டில் சிகிச்சை அளிக்க சென்ற டாக்டர்களே இறக்கின்றனர். அதுபோன்று நிலை நமது நாட்டில் ஏற்படக்கூடாது. சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த 62 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல் இந்தியாவிலும் குறைந்தபட்சம் 49 நாட்களாவது பிறப்பித்து ஊரடங்கை நீடிக்க வேண்டும்.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் தற்போது நிலைகுலைந்துள்ளது. இந்தியாவிலும் அதுபோன்ற நிலைமை வந்தால் பொருளாதாரத்தின் நிலைமை படுமோசமாகிவிடும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Similar News