சென்னையில் கொரோனாவிலிருந்து மீண்டோர் வீடு திரும்பும் முன்னர் ISIS செய்கை கட்டியதால் சர்ச்சை.!

சென்னையில் கொரோனாவிலிருந்து மீண்டோர் வீடு திரும்பும் முன்னர் ISIS செய்கை கட்டியதால் சர்ச்சை.!

Update: 2020-04-18 07:23 GMT

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 30 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். அவர்கள் வீடு செல்லும் முன்னர் அனைவரையும் நாற்காலியில் அமர வைத்து மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி, கைத்தட்டி வழியனுப்பி வைத்தனர். அப்போது சிலர் ஆள்காட்டி விரலை வானத்தை நோக்கிக் காட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

டெல்லி மாநாட்டில் பங்கேற்று நோய்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர்  நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். மருத்துவர்கள் ஆலோசனை கூறிக் கொண்டிருந்தனர் அப்பொழுது பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தனர். இந்தப் புகைப்படங்களை ரிபப்ளிக் பத்திரிக்கையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்ட 3 புகைப்படங்களில் இரண்டு புகைப்படங்களில் உள்ள மூன்று பேர் ஆள்காட்டி விரலை வானத்தை நோக்கி கட்டி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பால் பிரபலப் படுத்தப் பட்ட சைகை காட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகவே பலரும் தேசிய புலனாய்வு அமைப்பு இவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Similar News