Coffee Day உரிமையாளரை கரம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் தலைவரின் மகள்.!

Coffee Day உரிமையாளரை கரம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் தலைவரின் மகள்.!

Update: 2020-11-20 09:30 GMT

கர்நாடக காங்கிரஸ் தலைவர் DK சிவகுமாரின் மகளுக்கும் Cafe Coffee Day நிறுவனர் VG  சித்தார்த்தாவின் மகனுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகன் அமர்த்தியா, முன்னாள் கர்நாடக முதல்வரும், பா.ஜ.க தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களுருவில் நடந்த நிச்சயதார்த்த விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டார்.


அரசியலையெல்லாம் சற்று நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு DK சிவகுமாரின் கையைப் பிடித்து முன் வரிசையில் அமர்ந்திருந்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. இரு தலைவர்களும் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது தந்தை இறந்ததை அடுத்து Cafe Coffee Day வியாபாரத்தை அமர்த்தியா நிர்வகித்து வருகிறார். DK சிவக்குமார் நிறுவிய பொறியியல் கல்லூரியான குளோபல் அகாடமி ஆஃப் டெக்னாலஜியை ஐஸ்வர்யா நிர்வகிக்கிறார். 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

Similar News