பசிபிக் பெருங்கடலில் வலம் வரும் மூன்று அமெரிக்க கடற்படை விமான தாங்கிகள் - அலறும் சீனா.! #China #America #NavyAircraftCarriers

பசிபிக் பெருங்கடலில் வலம் வரும் மூன்று அமெரிக்க கடற்படை விமான தாங்கிகள் - அலறும் சீனா.! #China #America #NavyAircraftCarriers

Update: 2020-06-18 02:19 GMT

பசிபிக் பெருங்கடலில் மூன்று 100,000 டன் அமெரிக்க கடற்படை விமான தாங்கிகள் பல ஆண்டுகளில் முதன்முறையாக வலம் வருகின்றன. இதற்கு சீனாவிலிருந்து பலத்த கண்டனம் எழுந்துள்ளது. சீன ஆதரவிலான ஊடகங்கள் பெய்ஜிங் தனது நலன்களைப் பாதுகாக்க பின்வாங்காது என்று கூறியுள்ளன.

USS ரொனால்ட் ரீகன் மற்றும் USS தியோடர் ரூஸ்வெல்ட் ஆகிய இரண்டு கப்பல்களும் மேற்கு பசிபிக் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன, அதே நேரத்தில் USS நிமிட்ஸ் கிழக்கில் உள்ளது என்று அமெரிக்க கடற்படை செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு கப்பலும் 60 க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டிருக்கின்றன. 2017ல் பியோங்யாங்கின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக வட கொரியாவுடன் பதட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது கடைசியாக இப்படிக் கப்பல்கள் ரோந்து வந்தன.

இதன் இருப்பு முதலில் அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையில் முதன்முதலாக வெளியிடப்பட்டது.

"கேரியர்கள் மற்றும் கேரியர் ஸ்ட்ரைக் குழுக்கள் அமெரிக்க கடற்படை சக்தியின் தனித்துவமான அடையாளங்களாகும். அவற்றில் மூன்று கப்பல்கள் இங்குள்ளன என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று இந்தோ-பசிபிக் கட்டளையின் செயல்பாட்டு இயக்குனர் ஸ்டீபன் கோஹ்லர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை, கம்யூனிஸ்ட் கட்சியின் ஜால்ராவான குளோபல் டைம்ஸ் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் கேரியர்கள்(கடற்படை விமான தாங்கிகள்) அங்கிருக்கும் படைகளை அச்சுறுத்தக்கூடும் என்று கூறியது.

"இந்த விமான கேரியர்களை கொண்டு வருவதன் மூலம், தான் பெரிய கப்பற்படை ஜாம்பவான் என அமெரிக்கா காட்டிக் கொள்ள முயல்கிறது. தென் சீனக் கடலுக்குள் நுழைந்து ஜிஷா மற்றும் நன்ஷா தீவுகளில் சீனப் படையினரை (பாரசெல் மற்றும் ஸ்ப்ராட்லி தீவுகள்) மற்றும் அருகிலுள்ள கடல் வழியாக செல்லும் கப்பல்களை அச்சுறுத்தி அமெரிக்கா தனது மேலாதிக்க அரசியலை முன்னெடுக்க முடியும் "என்று பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட கடற்படை நிபுணரான லி ஜீயை மேற்கோளிட்டு குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை - மக்கள் விடுதலை இராணுவத்தின் அதிகாரப்பூர்வ ஆங்கில இணையதளத்தில் வெளியிடப்பட்டது - சீன ராணுவத்தில் இருக்கக்கூடிய ஆயுதங்களையும் எடுத்துக்காட்டியது. மேலும் பெய்ஜிங் தனது பலத்தை வெளிப்படுத்தி பதிலளிக்கும் வகையில் பயிற்சிகளை நடத்த முடியும் என்றும் கூறுகிறது.

"சீனாவில் டி.எஃப் -21 டி மற்றும் டி.எஃப் -26 கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற விமான கேரியர் தடுப்பு ஆயுதங்கள் உள்ளன" என்றும் அந்த செய்தி கூறுகிறது. எல்லா இடங்களிலும் வம்பிழுத்து வரும் சீனாவை அடக்கி வைக்க உலக நாடுகளின் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம்.

Cover Image Courtesy: CNN

Similar News