கொரோனாவை பரப்பி விட்ட சீனாவே, கொரோனா இருப்பதாக கூறி ஆப்பிரிக்கர்கள் மீது இனவெறியாட்டம்! மனிதத்தை குழி தோண்டி புதைக்கும் கொடூரம்!

கொரோனாவை பரப்பி விட்ட சீனாவே, கொரோனா இருப்பதாக கூறி ஆப்பிரிக்கர்கள் மீது இனவெறியாட்டம்! மனிதத்தை குழி தோண்டி புதைக்கும் கொடூரம்!

Update: 2020-04-13 04:50 GMT

சீனாவில் வாழும் ஆபிரிக்க இனத்தவர்கள் தாங்கள் இனவெறி நடவடிக்கைகளை எதிர்கொள்வதாக கவலை வெளியிட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் ஏற்படும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து சீன அரசாங்கம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து வெளிநாட்டவர்களிற்கு எதிரான உணர்வுகள் அதிகரித்துள்ளன.

சீனாவின் குவாங் சூ நகரில் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் ஹோட்டல்களிற்குள் நுழைவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டடுள்ளது. பல ஆபிரிக்க இனத்தவர்கள் தாங்கள் வெளிநாடுகளிற்கு செல்லவில்லை,கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொள்ளவில்லை என தெரிவித்துள்ள போதிலும் தாங்கள் இந்த நிலையை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

நாங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம், கண்மூடித்தனமான மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம்,எந்த விதமான அறிகுறிகள் இல்லாத போதிலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என அவர்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளனர்.



 "லிட்டில் ஆபிரிக்கா" என்று அழைக்கப்படும் நகரத்தின் யுயெக்ஸியு மாவட்டத்தில் குறைந்தது எட்டு பேருக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஐந்து பேர் நைஜீரிய நாட்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளாமல், உணவகங்கள் மற்றும் பிற பொது இடங்களுக்குச் சென்றதாகவும் தகவல்கள் வந்ததை அடுத்து பரவலான கோபத்தை எதிர்கொண்டனர். இதன் விளைவாக, அவர்கள் தொடர்பு கொண்ட கிட்டத்தட்ட 2,000 பேர் COVID-19க்கு பரிசோதிக்கப்பட வேண்டும் அல்லது தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று மாநில ஊடகங்கள் தெரிவித்தன.

பல ஆபிரிக்கர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும், ஹோட்டல்களால் திருப்பி விடப்பட்டதாகவும் கூறினார். "நான் சாப்பிட உணவு இல்லாமல் நான்கு நாட்களாக பாலத்தின் அடியில் தூங்கிக்கொண்டிருக்கிறேன் … என்னால் எங்கும் உணவு வாங்க முடியாது, கடைகளோ உணவகங்களோ எனக்கு சேவை செய்யாது" என்று உகாண்டாவைச் சேர்ந்த மாணவர் டோனி மத்தியாஸ் கூறியுள்ளார்.

நைஜீரிய தொழிலதிபர் ஒருவர் இந்த வார தொடக்கத்தில் தனது குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறினார். பல சீன இணைய பயனர்கள் இனவெறி கருத்துக்களை வெளியிட்டு அனைத்து ஆப்பிரிக்கர்களையும் நாடு கடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த வாரம் ஆப்பிரிக்க சமூகத்துடன் சில "தவறான புரிதல்கள்" இருந்ததாக ஒப்புக் கொண்டது. "சீன அரசாங்கம் சீனாவில் உள்ள அனைத்து வெளிநாட்டினரையும் சமமாக நடத்துகிறது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்" என்று செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் வியாழக்கிழமை கூறினார்

கொரோனா சீனாவில் இருந்து உலகம் முழுக்க பரவிய நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆபிரிக்க மக்கள் மீது சீனா இனவெறி காட்டுவது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி வருகிறது. 

 


Similar News