உய்குர் பிரிவினரை சித்ரவதை செய்யும் சீனா - இந்தியாவை விமர்சிப்பவர்களுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது!
china-tortures-uyghur-muslims-un-human-rights-commission-charges
சீனாவின் ஜின்ஜியாங்மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த சுமார் 1.2 கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். ஜின் ஜியாங் பகுதி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட போதிலும், 1949-ம் ஆண்டில் சீன ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
சீன ராணுவத்தை எதிர்த்து உய்குர் முஸ்லிம்கள் போராடி வருகின்றனர். அவர்களை ஒடுக்க சீன அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். அவர்களின் ஆதிக்கத்தை குறைக்க சீனாவின் ஹன் இன மக்கள் ஜின்ஜியாங் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர்.
இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி 48 பக்க அறிக்கையை வெளியிட்டது. கல்வி என்ற பெயரில் உய்குர் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகின்றனர். உடல் உறுப்புகள் திருடப்பட்டு விற்கப்படுகின்றன.பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.
இளைஞர்கள் பரிசோதனை எலிகளாக பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களை வைத்து மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகின்றன. உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ட்டாய கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. கருத்தடை மாத்திரை, கருத்தடை ஊசிகளும் போடப்படுகின்றன.
நூற்றுக்கணக்கான மசூதிகள் அழிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அவர்களின் அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Input From: Hindu Tamil