கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு கிடுக்கிப்பிடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு கிடுக்கிப்பிடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Update: 2019-12-03 11:05 GMT

கிறிஸ்தவ அமைப்புகள் சார்ந்த தொண்டு நிறுவனங்கள், அரசுக்கு எதிரான போராட்டங்களை ஊக்குவிப்பதாகவும், கிறிஸ்தவ மிஷனரிகளை கண்காணிக்க இதுவரை எந்த  வாரியம் இல்லாததால் அவைகளை கண்காணிக்கவும், அவர்களின் தேச விரோத செயல்களை கட்டுப்படுத்தவும்,  அவர்கள் சொத்துக்களையும், வெளிநாட்டு பணவரவை கண்டறியவும் தனி வாரியம் அமைக்க உத்ரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.


அந்த மனுவில் அவர், “கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்துக்கள் வருவாய், பண உதவிகளை கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை. கூடங்குளம் போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி போராட்டம் போன்றவற்றில் கிறிஸ்தவ மிஷனரிகள் பின்புலமாக இருந்த இயக்கியுள்ளன. எனவே இந்து அறநிலையத்துறை, வக்பு வாரியம் போன்ற கிறிஸ்தவ அமைப்புகளை கண்காணிக்க தனி வாரியம் அமைக்கக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.


இந்த  மனுவை ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


Similar News