கூட்டம் சேராததால் பொது கூட்டத்தை பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறினார் கெஜ்ரிவால்.. காங்கிரசுடன் கூட்டு எனக் கூறியதால் பொது மக்கள் அதிருப்தி.!

கூட்டம் சேராததால் பொது கூட்டத்தை பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறினார் கெஜ்ரிவால்.. காங்கிரசுடன் கூட்டு எனக் கூறியதால் பொது மக்கள் அதிருப்தி.!

Update: 2019-02-25 07:56 GMT

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று தனது கட்சி சார்ந்த பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சண்டீகர் சென்றார். பேரணி எதிர்பார்ததபடி நடைபெறவில்லை.


மிகக் குறைந்த தொண்டர்களே வந்திருந்தனர். இதனால் ஒரு மணிநேரம் கெஜ்ரிவால் தாமதமாக வந்து பங்கேற்றார். பேரணியை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேச வந்தார். நேற்று ஞாயிற்றுக் கிழமையாக இருந்தும் கூட கூட்டம் சேரவில்லை. 100 முதல் 200 பேர்வரை மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர்.


இந்த நிலையில் ஆர்வமின்றி அவர் பேச ஆரம்பித்தார். அப்போது பாஜகவில் இணைந்து, சென்ற 2014 மக்களவை தேர்தலில் சண்டீகர் தொகுதியில் வெற்றி பெற்ற பிரபல சினிமா நட்சத்திரம் கிரண் கேரை தாக்கிப் பேச தொடங்கினார்.


கிரண் கேர் பணத்துக்காக ஆசைப்பட்டு பிஜேபியில் இணைந்து திடீரென எம்பி ஆனவர் என்றும் அவருக்கு மக்கள் நலன் மேல் ஆர்வம் இல்லை என்றும் பேசினார். அவரது பேச்சு சுவாரசியமின்றி இருந்ததால் கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் வெளியேற தொடங்கினர். இதை சற்றும் எதிர்பார்க்காத கெஜ்ரிவால் 7 நிமிடத்துக்குள் தனது பேச்சை முடித்துக் கொண்டு திரும்பினார்.


சென்ற 2014 மக்களவை தேர்தலில் கிரண் கேருக்கு எதிராக குல்பனாக் என்கிற சினிமா நட்சத்திரத்தை
கெஜ்ரிவால் களமிறக்கினார். ஆனால் அவர் படுதோல்வி அடைந்தார். குல்பனாக்கும் தற்போது ஆம் ஆத்மி கட்சியில் முன்புபோல பணியாற்றவில்லை.


சென்ற ஆண்டு அவர் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில் “
கெஜ்ரிவால் பஞ்சாப் தேர்தலின் போது தனது கட்சி வெற்றிக்காக காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் கை கோர்த்தார் எனவும், இது ஆபத்தான ஒன்று எனவும் பேட்டி அளித்திருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் காங்கிரசை ஊழல் கட்சி எனக் கூறி முழு மூச்சாக எதிர்த்து வந்த கெஜ்ரிவால் தற்போது பிரதமர் மோடியை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து பேசப் போவதாகக் கூறியிருந்தார்.


இது போன்ற அவரின் முரண்பாடுகள் பிடிக்காததால்தான்
கெஜ்ரிவால் கூட்டத்துக்கு கூட்டம் குறைவதாகவும், கூட்டத்துக்கு தொண்டர்கள் கூட வருவதில்லை எனவும் கூறப்படுகிறது


Similar News