மீண்டும் புதியவகை கொரோனா வைரஸ் சீனாவில் பரவுகிறதா ? மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் கொரோனா வைரஸ் ?

மீண்டும் புதியவகை கொரோனா வைரஸ் சீனாவில் பரவுகிறதா ? மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் கொரோனா வைரஸ் ?

Update: 2020-06-16 04:54 GMT

சீனாக்காரன் பொய்க்கு நிகர் சீனாகாரன் பொய் தான் என்பதை நிரூபிக்கும் செய்தி ஒன்றை உலவவிட்டுள்ளது சீனா அரசு. சீனா சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சால்மன் என்ற மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி 49 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. 10 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் மற்றும் 39 உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 36 பாதிப்புகள் பீஜிங்கில் பதிவாகி உள்ளது. 50 நாட்கள் நோய் பாதிப்பு இல்லாமல் இருந்த சீனாவில் மீண்டும் நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சால்மன் என்ற மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர், நாட்டின் பிற பகுதிகளிலும் பரவி வரும் வகையுடன் இந்த வைரஸ் ஒத்திருக்கவில்லை என்று கூறியுள்ளார். இது வேறு இடத்திலிருந்து வந்தது என்று பரிந்துரைத்துள்ளார்.

இருப்பினும், இப்போதைக்கு, வைரஸ் எங்கிருந்து வந்திருக்கலாம் என்பதற்கான தெளிவான அறிகுறி எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்

Similar News