விஜய் மேனேஜரை வச்சி செய்யும் தளபதி ரசிகர்கள் – காரணம் இந்த ஒரே பதிவு தான்.!

விஜய் மேனேஜரை வச்சி செய்யும் தளபதி ரசிகர்கள் – காரணம் இந்த ஒரே பதிவு தான்.!

Update: 2020-06-30 06:12 GMT

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அவருடன் நீண்ட வருடங்களாக பயணித்து தற்போது தளபதியின் மேனேஜராக இருப்பவர் ஜெகதீஷ். மேலும் இவர் மாஸ்டர் திரைப்படத்தில் லைன் புரௌடியூசராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் கோப்ரா படத்திலிருந்து வெளியான தும்பி துள்ளல் என்ற பாடலுக்கு தான் அடிமையாகி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஜெகதீஷின் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் மாஸ்டர் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளனர்.

ரசிகர் ஒருவர் உங்களின் ட்வீட் நோட்டிபிகேஷன் வந்ததும் மாஸ்டர் டிரைலர் அப்டேட் என நினைத்தேன் என கூறியுள்ளார். ஒரு ஏழு நிமிசத்துல அடிமையா? எதையாவது சொல்லிட்டு இருக்காம மாஸ்டர் டிரைலர் அப்டேட் விடுங்க ப்ரோ என கூறியுள்ளார்.

Similar News