'கொரோனாவை எதிர்க்கும் சக்தியை வழங்கும் யோகாவை குடும்பத்துடன் செய்யுங்கள்': சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி பேச்சு.!

'கொரோனாவை எதிர்க்கும் சக்தியை வழங்கும் யோகாவை குடும்பத்துடன் செய்யுங்கள்': சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி பேச்சு.!

Update: 2020-06-21 03:42 GMT

உலகம் முழுவதும் இன்று 6- வது யோக தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பிரதமர் மோடி மக்களிடம் இன்று காலை  வீடியோ முறையில் தொலைகாட்சியில் தோன்றி உரையாற்றினார்.

அப்போது அவர் " யோகா மிக சிறந்த எதிர்ப்பு சக்தியை நமக்கு வழங்குகிறது என்றார். " மேலும் அவர் கூறுகையில் , யோகாவின் நன்மைகளை முன்னெப்போதும் இல்லாத அளவு நாடு இந்த கொரோனா வைரஸ் காலத்தில் அதிகமாகவே உணர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் நமக்கிடையே ஒற்றுமையை உண்டாக்கும் வண்ணமும் உள்ளது, இப்போதைய நிலையில் அதாவது கொரோனா அதிக அளவில் பரவி வரும் நிலையில் மக்கள் யோகா கற்க அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர் . எனவே உங்கள் வாழ்வில் யோகாவை ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

அதற்காக யோகாவுடன் பழகுங்கள், கற்கவும் செயல்படவும் இது மிக எளிதானது, யோகா உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது, மன ஆரோக்கியத்தையும் தருகிறது. யோகாவுக்கு எந்த ஜாதி மதம் போன்ற பேதங்கள் இல்லை, பகவத் கீதையில் கூட கிருஷ்ணர் யோகாவைப் பற்றி கூறியுள்ளார்.இந்த ஆண்டு இப்போதுள்ள தனிமை சூழலை பயன்படுத்தி குடும்பத்துடன் யோகா செய்ய மிக சரியான நேரம், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி யோகா செய்ய முற்படுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.  

Similar News