ஒன்பது ஹிஜ்புல் முஜெஹிய்தீன் பயங்கரவாதிகளை சுட்டு கொன்றது இந்திய ராணுவம்.!

ஒன்பது ஹிஜ்புல் முஜெஹிய்தீன் பயங்கரவாதிகளை சுட்டு கொன்றது இந்திய ராணுவம்.!

Update: 2020-06-09 02:27 GMT

ஜம்மு - காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள ரேபான் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக  ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதற்கு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சண்டையில் வீரர்களுக்கு எ்ந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கலோனல் ராஜேஷ் காலியா தெரிவித்தார். இந்நிலையில், ராணுவத்தினர் தேடி வந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள்  ஊடுருவி இருப்பதாகப் போலீசுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் ராணுவத்தினரும் காஷ்மீர் போலீசாரும் இணைந்து மேற்கொண்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் எனக் கண்டறியப்பட்ட 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் ஹிஜ்புல் முஜெஹிய்தீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.

பிஞ்ஜோரா பகுதியில்  5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவத்தினர் தகவல் அளித்திருந்த நிலையில் கடந்த  12 மணி நேரத்தில் மேலும் 4 பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News