இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யா!

இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யா!

Update: 2020-06-20 08:03 GMT

லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவோம் என்று ரஷ்யா உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய தூதரக துணைத் தலைவர் ரோமன் பபுஷ்கின் கூறுகையில், "இந்த பதற்றம் விரைவில் தணிந்து இரு நாடுகளும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என்று நம்புகிறோம். இது இந்த பிராந்தியத்திற்கு அவசியம் என்று ரஷ்யா எண்ணுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லவ்ரோவ், "இந்திய மற்றும் சீன ராணுவப் பிரதிநிதிகள் தொடர்பு கொண்டதாகவும் அவர்கள் தற்போதைய சூழ்நிலை குறித்து ஆலோசித்து பதற்றத்தைத் தணிக்க முயற்சிகள் பற்றி பேசிக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இதை வரவேற்கிறோம்" என்று கூறியுள்ளார்.

நெருங்கிய உறவு பாராட்டும் இந்தியா, ரஷ்யா இரு நாடுகளும் அடிக்கடி உயர்மட்ட அளவில் தொடர்பிலிருக்கின்றன. இந்த வருடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் முடியும் கொரோனா வைரஸ் பிரச்சினை ‌உட்பட பல சமயங்களில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரத்தில் வரும் RIC என்ற ரஷ்ய - இந்திய - சீன முத்தரப்பு சந்திப்பு நடக்கவிருக்கிறது. உலக வரைபடத்தில் நிலையாகப் பொருந்தி இருக்கும் இந்த மூன்று நாடுகளின் தொகுப்பு ஒரு மறுக்கமுடியாத நிஜம் என்று ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார். எல்லைப் பதற்றத்தினிடையே தற்போது இந்த மூன்று நாடுகளுக்கிடையே நிலவும் கூட்டுறவைப் பற்றிக் கேட்ட போது "இது இப்படியே இருந்துவிடும் என்று சொல்ல முடியாது" என்றார். மேலும் இந்த வருடம் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு(SCO) மற்றும் BRICS கூட்டமைப்பின் மாநாடுகளையும் ரஷ்யாவில் நடக்கவிருக்கின்றன.

இதற்கிடையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசிய நிலையில் பாகிஸ்தான் கூறியதைக் போல் ரஷ்யா பாகிஸ்தானின் முன்னுரிமைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

நன்றி: ‍defencenews

Similar News