சீன அரசு தொடர்ந்து மூடி மறைப்பதால் பலியான சீன வீரர்களின் பெற்றோர்கள் புலம்பல் : சீன கம்யூனிஸ்டு கட்சியின் நாளேடு ஆறுதல்.!

சீன அரசு தொடர்ந்து மூடி மறைப்பதால் பலியான சீன வீரர்களின் பெற்றோர்கள் புலம்பல் : சீன கம்யூனிஸ்டு கட்சியின் நாளேடு ஆறுதல்.!

Update: 2020-06-26 02:47 GMT

லடாக் பள்ளத்தாக்கில் சமீபத்தில் இந்தியா மற்றும் சீனா இரு நாட்டு இராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. இதுவரை சீனா இது குறித்து மழுப்பலான பதில்களை ஆளுக்கு ஒருவராக கூறி வருகிறது.

இந்த நிலையில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஊது குழல் என கருதப்படும் தி குளோபல் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் ஹு ஜிஜின் எழுதிய ஒரு கட்டுரையில், சீன தரப்பில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக இந்தியா பொய் பேசி வருகிறது ஆனால் அந்த நாடு 16 சீன வீரர்களின் உடலை மட்டுமே ஒப்படைத்தது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் மரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களை அடக்கம் செய்வதிலும், மதிப்புடன் நடத்தப்பட்டதிலும் இந்தியா பெருந்தன்மையுடன் செயல்படுகிறது என்றும் சீன அரசு அவ்வாறு செய்யவில்லை என்றும் சீன இராணுவ வீரர்கள் சமூக ஊடகங்களில் சில வீடியோ படங்களை உரையுடன் வெளியிட்டதாகவும் இது அங்கு வைரலாவதாகவும் சில நாட்களுக்கு முன் செய்திகள் வந்தன.

மேலும் அந்த வீடியோவில் "பலியான சீன வீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிருப்தியில், கோபத்தில் உள்ளதாகவும் தங்கள் நாட்டு வீரர்கள் பலியான விவகாரத்தில் சீன அரசு மூடி மறைப்பதாகவும்" வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் " வதந்திகளை சீனர்கள் நம்ப வேண்டாம், இறந்தவர்கள் இராணுவத்தில் மிக உயர்ந்த மரியாதையுடன் நடத்தப்பட்டுள்ளனர், மேலும் அது பற்றிய தகவல்கள் உரிய நேரத்தில் சமூகத்திற்கு தெரிவிக்கப்படும், அந்த வீரர்கள் ஹீரோக்களாக விரைவில் கவுரவிக்கப்படுவார்கள், தேசத்தின் நினைவில் கொள்ளப்படுவார்கள் " என கூறப்பட்டுள்ளது.

மேலும் "20 க்கும் குறைவான" பி.எல்.ஏ வீரர்கள் கொல்லப்பட்டதாக குளோபல் டைம்ஸ் ஒப்புக் கொண்டாலும், ஜி ஜின்பிங் அரசாங்கம் அவர்களைப் பற்றி எதுவும் கூறாமல் இறுக்கமாக உள்ளது ஏன் என சீன சமூக ஊடகங்களில் கேள்வி மேல் கேள்விகள் கேட்கப்படுவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மேலும் " இந்தியாவின் வலுவான வரிசைப்படுத்தல் மற்றும் வெறித்தனமான ஊடுருவல்களை எதிர்த்து கடுமையாக தாக்க சீனப்படைகள் இப்போது தயாராக உள்ளது" என்றும் குளோபல் பத்திரிகையில் அதன் ஆசிரியர் இந்தியாவை மிரட்டும் வகையில் எழுதியுள்ளார்.

இதிலிருந்து சீனாவுக்கு பலத்த அடி கிடைத்துள்ளது என்பது உண்மையாகி வருவதாகவும், இன்னமும் மக்களுக்கு சரியான விவரங்களை சொல்லாமல் சீனா இழுத்தடித்து வருவது ஏன் என்ற கேள்விகளும் அங்கு எழுப்பப்படுவருகின்றன.   

https://swarajyamag.com/news-brief/families-of-pla-troops-outraged-after-china-neither-officially-honours-nor-acknowledges-its-slain-troops

Similar News