நொய்டா, மும்பை, கொல்கத்தாவில் பரிசோதனை திறனை அதிகரிக்க புதிய மையங்களை காணொலி மூலம் துவங்கி வைத்த பிரதமர் மோடி.!

நொய்டா, மும்பை, கொல்கத்தாவில் பரிசோதனை திறனை அதிகரிக்க புதிய மையங்களை காணொலி மூலம் துவங்கி வைத்த பிரதமர் மோடி.!

Update: 2020-07-28 02:13 GMT

தக்க சமயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது என பிரதமர் மோடி பேச்சு. நம் மக்கள் கொரோனா வைரஸை தைரியமாக எதிர்த்து போராடி வருகிறார்கள். கொரோனா வைரஸ் தடுப்பு கவச உடைகளை தயாரிப்பதில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.  

மேலும், இந்தியாவில் 11 ஆயிரம் கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளது. பின்னர் 1,300 ஆய்வகங்களில் நாள்தோறும் ஐந்து லட்சத்திற்கும் மேல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை மையங்களை கொண்டு ஹெபடைடிஸ் பி மற்றும் சி, ஹெச்ஐவி உள்பட பரிசோதனைகளை செய்ய முடியும் என்றார்.



இந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மேற்கு வங்களம் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இந்த காணொளி காட்சியில் கலந்து கொண்டனர்.  

Similar News