முதலாவது ''பேராசிரியர் பி.சி. மகாலனோபிஸ் அலுவல் புள்ளியியல் தேசிய விருது'' டாக்டர் சி.ரங்கராஜனுக்கு வழங்கப்பட்டது.!

முதலாவது ''பேராசிரியர் பி.சி. மகாலனோபிஸ் அலுவல் புள்ளியியல் தேசிய விருது'' டாக்டர் சி.ரங்கராஜனுக்கு வழங்கப்பட்டது.!

Update: 2020-07-09 09:34 GMT

முதலாவது '' பேராசிரியர் பி.சி. மகாலனோபிஸ் அலுவல் புள்ளியியல் தேசிய விருது'' முன்னாள் தேசிய புள்ளியியல் ஆணையத் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் சி.ரங்கராஜனுக்கு வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்பட்டது. 14-வது தேசிய புள்ளியியல் தினம் , கடந்த மாதம் 29-ம்தேதி கொண்டாடப்பட்ட நிலையில், தேசிய புள்ளியியல் முறையில் முழுமையான சீர்திருத்தங்களுக்கு அடித்தளம் அமைத்த அவரது மிகச்சிறந்த பங்களிப்புக்காக இது வழங்கப்பட்டது. இந்திய புள்ளியியலின் தந்தை எனப் போற்றப்படும் பேராசிரியர் பி.சி. மகாலனோபிஸ் பிறந்த நாளையொட்டி, ஆண்டு தோறும் ஜூன் 29-ம் தேதி தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது. கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள சவால்களுக்கு மத்தியில், புதுதில்லியில் மெய்நிகர் முறையில் நடைபெற்ற இந்த விழாவில், உலகம் முழுவதும் உள்ள புள்ளியியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் வசிக்கும் டாக்டர் சி. ரங்கராஜன் இந்த விழாவில் காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டார். இந்த வலைதள கருத்தரங்கில் அவர் உரையாற்றினார். டாக்டர் சி.ரங்கராஜன் தமது உரையில், தரவிலிருந்து நுண்ணறிவைப் பெறுவது புள்ளியியலின் ஒழுங்குக்கு மிக முக்கியமாகும் என விளக்கினார். நம்பகமான தரவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிய அவர், அரசின் தரவுகளுக்கு நம்பகத்தன்மையை ஊட்டுவதில் தேசிய புள்ளியியல் ஆணையத்துக்கு முக்கிய பங்கு உள்ளதாகத் தெரிவித்தார். இந்த ஆணையத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை அரசு விரைவில் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட , இந்தியாவின் தலைமை பள்ளியியல் நிபுணரும், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை செயலருமான திரு. பிரவின் ஶ்ரீவத்சவா, நாட்டின் புள்ளியியல் துறையில் புதிய வழக்கமாகிப்போன கைபேசிகள், இணையம் சார்ந்த இண்டர்பேஸ் , தொலைபேசி பேட்டிகள் மூலம் தரவுகளைப் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட டிஜிடல் ஆய்வு தளத்துக்கு அமைச்சகம் மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மாநில அளவிலும், தேசிய அளவிலும் தரவு தரத்தை முன்னேற்றுவதற்காக அமைச்சகம் உலக வங்கியிடமிருந்து கடன் முறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தேசிய புள்ளியியல் தினத்தையொட்டி, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் திரு. ராவ் இந்தர்ஜித் சிங், ஒரு குடையின் கீழ் தரவுகளைப் பெறுவதற்கான வலைதளம் என்ஐஐபி-யை உருவாக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் பொருளாதாரம் உள்பட அனைத்து அதிகாரபூர்வ தரவுகளும் இணைக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த விருதுக்கான நினைவுப் பரிசு மற்றும் பாராட்டு பத்திரத்தை டாக்டர் சி.ரங்கராஜனின் சென்னை இல்லத்துக்கு நேரில் சென்று, தேசிய புள்ளியியல் சென்னை மண்டல அலுவலகத்தின் (கள நடவடிக்கை பிரிவு) துணை தலைமை இயக்குநர் திரு. சாஜி ஜார்ஜ், அமைச்சகத்தின் சார்பில் 09.07.2020 அன்று வழங்கியதாக, சென்னை தேசிய புள்ளியியல் சென்னை மண்டல அலுவலகத்தின் (கள நடவடிக்கை பிரிவு) துணை இயக்குநர் திருமிகு. பி.ரெம்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Similar News