தெலுங்கு காமெடி நடிகர் சீரியல்களில் நடிக்க களமிறங்கினார்.!

தெலுங்கு காமெடி நடிகர் சீரியல்களில் நடிக்க களமிறங்கினார்.!

Update: 2020-07-04 13:30 GMT

தமிழ் சினிமாவில் கவுண்டமனி மாதிரி தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் பிரேமானந்தம். இவர் முன்னணி சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இனிமேல் பிரேமானந்தா சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் சின்னத்திரையில் நாடகங்களில் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் தமிழ் படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வந்துள்ளார்.

இதைக்கேட்ட அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தமாக உள்ளனர். ஏனென்றால் தனது ரசிகர்களை மட்டுமல்லாம் டோலிவுட்டையே தனது காமெடியில் கலக்கிக் கொண்டிருப்பவர் சினிமாவை விட்டு சின்னத்திரையில் கால் எடுத்து வைப்பது அதிர்ச்சியாகவுள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Similar News