கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி நீண்ட பேச்சு: "புதிய வேலை கலாச்சாரம் குறித்து" முக்கிய பேச்சு என தகவல்.!

கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி நீண்ட பேச்சு: "புதிய வேலை கலாச்சாரம் குறித்து" முக்கிய பேச்சு என தகவல்.!

Update: 2020-07-13 13:54 GMT

பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் கூகுள் நிறுவனத்தின் முதன்மை தலைமை அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பேசினார். உலகளாவிய தொற்றுநோய் கோவிட் -19, தரவு பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு போன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் கலந்தாலோசித்தார்கள் என செய்திகள் வந்துள்ளன.

இந்த வீடியோ கான்பிரன்சிங் ஆலோசனைக் குறிட்து ட்வீட் செய்து பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார். "கோவிட் -19 பாதித்த இந்த காலகட்டத்தில் மாறி வரும் புதிய வேலை கலாச்சாரம் பற்றி பேசினோம் என்றும், உலகளாவிய தொற்றுநோயால் விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்றும், தரவு பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் தாங்கள் பேசியதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் கல்வி, கற்றல், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் செலுத்துகை -ஐ எவ்வாறு இன்னும் சிறப்பாக மேம்படுத்துவது உட்பட பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன என்றும், பல துறைகளில் கூகுளின் முயற்சிகள் பற்றி மிக அதிகமான தகவல்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் கூறினார்.

மேலும் இந்த சந்திப்பின்போது இந்திய விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கை மற்றும் தொழில்நுட்பத்தின் ஆற்றல் குறித்து பிரதமர் மோடியிடம் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பேசினார் என்றும், மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கோவித் -19 பற்றிய நம்பகமான தகவல்களை வழங்குவதற்கும் கூகுள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து பிரதமர் மோடிக்கு சுந்தர் விரிவாக எடுத்துரைத்தார் எனவும் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் லாக்டவுன் என்ற வலுவான நடவடிக்கை உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் மிக வலுவான அடித்தளத்தை அமைத்தது என்று சுந்தர் பிச்சை பாராட்டினார் எனவும் கூறப்படுகிறது.

என்றாலும் ஐ.டி. பணியாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு நிரந்தரமாகவே வீட்டில் இருந்தபடியே வேலையை செய்யும் வகையில் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தலாம் என்ற பேச்சை சில நிறுவனங்கள் முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தும் பிரதமர் நீண்ட நேரம் பேசியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இதர துறைகளுக்கும் இரவு ஷிப்டு பணிகள் அளித்து அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்பு அளிக்கலாம் என்ற கருத்தும் யோசனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.   

மேலும் கூகுள் நிறுவனம் இந்தியாவில் ரூ. 75 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக பிச்சை அறிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  

Similar News