புதுச்சேரி : மருத்துவத் துறையினர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் - துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தகவல்.!

புதுச்சேரி : மருத்துவத் துறையினர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் - துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தகவல்.!

Update: 2020-07-22 08:44 GMT

கோரோனா பணியில் சுகாதார பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணிபுரிந்து வரும் நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட வேலைப்பளு காரணமாக மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்கள் என்பதை நான் உணர்கிறேன். ஆனால், இன்றியமையாத சேவை துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு இதுபோன்ற சூழல் நிச்சயம் ஏற்படும். காவல்துறையில் பெரும்பாலானவர்கள் 24 மணி நேரமும் பணிச்சுமையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. கொரோனாவுக்கு எதிராக போராடும் அனைத்துத்துறையினரையும் நான் மதிக்கிறேன். வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க கடின உழைப்பு செலுத்தும் துறைகளில் பணியாற்றுவோர்களுக்கு உரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும்.

இந்த இக்கட்டான நேரத்தில் அதிகபட்ச ஈடுபாட்டுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவது நிர்வாகி என்ற முறையில் எனக்கு மிகப்பெரிய சவாலான பணியாக உள்ளது. ஜூலை 19ஆம் தேதி சுகாதார கட்டுப்பாட்டு அறைக்கு ஆய்வு செய்ய சென்றபோது, அங்கு அத்தியாவசியமான, ஆனால் பதில் அளிக்கப்படாத கேள்விகள் இருப்பதையும், களநிலவரத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு சார்ந்த அதிகாரி ஒருவர் தயார் நிலையில் குறைவாக இருப்பதையும் உணர்ந்தேன். அவருக்கு வழிகாட்டினேன். அப்போது அந்த சம்பந்தப்பட்ட நபர் இனிமேல் தேவையான முழு ஆயத்த நிலையில் இருப்பதாக என்னிடம் உறுதி அளித்தார்.

இதையடுத்து அவரது ஒத்துழைப்புக்காக அனைவரின் முன்னிலையில் அவரை பாராட்டினேன். வெள்ளை உடை அணிந்து போராடும் மருத்துவத்துறையினர் மீது அதிகபட்ச மரியாதை வைத்திருக்கிறேன். காவல்துறையினரை போலவே, மருத்துவத்துறையினரின் பணிகளையும் போற்றுகிறேன். எனவே, பொதுமக்களின் நலன் கருதியும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் கொரோனா பரவலை தடுப்பதில் மருத்துவத்துறையினர் தங்களது கவனத்தை செலுதத்த வேண்டும் என்னால் மனச்சங்கப்படுத்தப்பட்டதாகவோ அல்லது எனது வழிகாட்டுதலால் பாதிக்கப்பட்டதாகவோ யாராவது உணர்ந்தால் எனது கடமையை சரியான நேரத்தில் கடுமையான எனது கடமையை செய்ததாகவே உணர்கிறேன். பாதிக்கப்பட்டதாக உணர்பவர்கள் விரும்பினால் தெளிவுபெற எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்திக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News