தல அஜித்தின் வலிமை படம் ஹிந்தியில் ரீமேக்?

தல அஜித்தின் வலிமை படம் ஹிந்தியில் ரீமேக்?

Update: 2020-07-29 10:37 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டாரத்தை திரட்டி வைத்திருக்கிறார். இவர் நடிக்கும் படங்கள் தற்போது மாஸ் ஹிட் கொடுத்து மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்து வருகிறது. நேர்கொண்ட பார்வை போனி கபூர் இயக்கத்தில்,இயக்குனர் ஹெச் வினோத்கூட்டணியில் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி கண்டதால் அடுத்த படமும் போனிகபூர் அஜித்தை வைத்து எடுக்க ஆரம்பித்திருக்கிறார் அந்த படம்தான் *வலிமை*. இந்தப் படத்திலும் வினோத் தான் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த படத்தை இந்தியில் 'பான் இந்தியா' என்று இந்தியில் ரீமேக் செய்கிறார் போனிகபூர். இந்த படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. அஜித் இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாகவும் அதிக சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ள ஒரு படமாகவும் அமைந்திருக்கிறது. இந்த படம் 2021-ல் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Similar News