"பக்ரீத்தின் போது கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டும்" - எச்சரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்.!

"பக்ரீத்தின் போது கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டும்" - எச்சரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்.!

Update: 2020-07-26 15:03 GMT

பாகிஸ்தானில் கொரானா வைரஸால் பாதிப்படைந்த நோயாளிகள் 86 சதவீதம் பேர் குணமடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டின் திட்டமிடல் மற்றும் சிறப்பு முயற்சிகள் அமைச்சரான அசாத் உமர், வைரஸ் பரவாமல் இருக்க பக்ரீத் சமயத்தில் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், சமூக விலகலைப் பின்பற்றவும் கேட்டுக் கொண்டார்.

சனிக்கிழமையன்று தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையத்தின் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் போது, ​​வைரஸ் பரவாமல் இருக்க கால்நடை சந்தைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார் என்று டான் செய்திகள் தெரிவித்துள்ளது. பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் விலங்குகளின் 527 சட்டவிரோத விற்பனை கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில், பாகிஸ்தானில் 1,317 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 40 இறப்புகள் பதிவாகியுள்ளன, மொத்தமாக நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 272,807 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 5,818 ஆகவும் உள்ளது. அதில் 236,596 குணமடைந்து சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 236,596 ஆக குறைந்துள்ளது .

தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கையை பாராட்டும் உமர், கொடிய வைரஸ் பரவாமலிருக்க பக்ரிதை எளிமையாக கொண்டாடவேண்டும் என்றார். "மக்கள் பொதுஇடங்களுக்கு செல்வதை தவிர்த்து சமூகஇடைவெளியையை தொழும் போது கடைப்பிடிக்க வேண்டும் " என்று அறிவுறுத்தியுள்ளார்.

 source: https://swarajyamag.com/insta/people-should-avoid-going-to-public-places-pakistan-minister-warns-of-covid-19-spread-during-eid

Similar News