"ஆடி மாசம் பதவியேற்பு ஆகாது" பகுத்தறிவு(?) தி.மு.க-வின் அடடே செண்டிமெண்ட்!

"ஆடி மாசம் பதவியேற்பு ஆகாது" பகுத்தறிவு(?) தி.மு.க-வின் அடடே செண்டிமெண்ட்!

Update: 2020-07-24 01:46 GMT

தமிழக வரலாற்றில் ஆகச்சிறந்த இந்து மத நம்பிக்கைகளை கண்மூடிதனமாக பின்பற்றுபவர்கள் சங்கரமடமோ, ராமகிருஷ்ண மடமோ, தருமபுரம் ஆதினமோ, ஏன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவோ, இல்லை ஆன்மீகவாதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட இல்லை சாட்சாத் திராவிட முன்னேற்ற கழகத்தினர்தான்.

கலைஞர் அணியும் மஞ்சள் துண்டாகட்டும், திருக்குவளையில் நள்ளிரவில் கருணாநிதி குடும்ப பெயரில் நடக்கும் அங்காளம்மன் பூஜையாகட்டும், துர்கா ஸ்டாலின் அவர்களின் கோ பூஜையாகட்டும், தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டு விழாவில் பரிகாரத்திற்காக கருணாநிதி அவர்கள் பட்டுவேஷ்டி அணிந்து புறவாசல் வழியே வந்தாதாகட்டும், வருடமெல்லாம் வாழ்த்து சொல்லாமல் ஒளிபரப்பும் சன் தொலைகாட்சி கூட சரியாக தமிழ் புத்தாண்டில் துவங்கப்பட்டு கோடி கோடியாக சம்பாதிப்பதாகட்டும் திராவிட முன்னேற்ற கழகத்தின் இந்து மத நம்பிக்கைகளுக்கு அவர்களை மிஞ்ச ஆள் இல்லை! ஆனால் வெளியில் பெரியார் என்ன? கருஞ்சட்டை என்ன? தாலி அறுப்பு என்ன? வைத்த விபூதி, கும்குமத்தை அழிப்பது என்ன'வென புரட்சி வெங்காயங்களை செய்து கொண்டே இருப்பார்கள் தி.மு.க'காரர்களும் அவர்களது தலைமை குடும்பத்தினரும்.

இதனை தொடர்ந்து நேற்றைய ருசிகர சம்பவம் ஒன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்துள்ளது. அதாவது தமிழகத்திலிருந்து கே.பி.முனுசாமி, தம்பிதுரை, GK வாசன் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி-க்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், தி.மு.க-வை சேர்ந்ந ஆகப்பெரிய பெரியாரிஸ்ட்களான திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ மூவரும் பதவியேற்க வரவில்லை. இது குறித்து விசாரித்த போது, "கொரோனா பரவல் உள்ள நிலையில் தங்குமிடம் மற்றும் உணவுப் பிரச்னை உள்ளன" என்று வெளியில் பந்தாவாக கூறி கொண்டாலும் உண்மையில் "இது ஆடி மாதம். பதவி ஏற்பது உசிதமல்ல. எப்படியும் செப்டம்பருக்குள் பார்லிமென்ட் கூடும். அப்போது பார்த்துக் கொள்ள லாமென்று இருந்து விட்டார்" என தகவல்கள் தெரிவிப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.


அதாவது சொல்லப்போனால் திருச்சி சிவா எல்லாம் பெரியாரின் நேரடி சீடன் போல் பந்தாவாக திரிந்தாலும் ஆடி மாசத்துல பதவி ஏற்குறது ஆகாது என பம்முறது நகைச்சுவையே. ஊருக்கு வேஷம் போடுவதை நிறுத்துங்கள் ஜன்ம சாபல்யம் அடைவீர்கள் திராவிட முன்னேற்ற கழக உடன்பிறப்புகளே.

Similar News