'வேண்டாம் சீனா' பாகிஸ்தானை மிரட்டும் அமெரிக்கா - விழிபிதுங்கி நிற்கும் இம்ரான் கான்.!

'வேண்டாம் சீனா' பாகிஸ்தானை மிரட்டும் அமெரிக்கா - விழிபிதுங்கி நிற்கும் இம்ரான் கான்.!

Update: 2020-07-13 06:11 GMT

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் விமான சேவையை அமெரிக்காவிற்கு தடை செய்துள்ளது அமெரிக்க அரசு. பாகிஸ்தானி விமானிகள் மூன்றில் ஒருவராவது போலி விமானி லைசன்ஸ்களுடன் விமானத்தை இயக்குவதாக பாகிஸ்தான் விமானத்துறை அமைச்சர் வெளிப்படுத்தியிருந்தார். இதனைக் கொண்டு ஐரோப்பிய யூனியனும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் விமான சேவையை ஆறுமாதத்திற்கு ரத்து செய்துள்ளது.

அமெரிக்கா தனது எதிரியான தாலிபான் தீவிரவாத இயக்கத்தை அழிப்பதற்கு இடையூறாக பாகிஸ்தான் இருந்ததை அறிந்தபின் பாகிஸ்தானிடம் இருந்து விலகிக் கொண்டத. மேலும் ஒசாமா பின்லேடனின் மரணத்திற்குப் பிறகு பாகிஸ்தான் பெரிய நெருக்கடியை எதிர் கொண்டது அமெரிக்காவிடமிருந்து. இதுவே டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தானை கடுமையாக கையாண்டதற்கு காரணமாகும்.

பாகிஸ்தான் சீனாவுடன் நெருங்கிய உறவு கொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் சீனா உடைய அத்துமீறல் மற்றும் சீனா பாகிஸ்தானுடனான எல்லை உறவையும் உலக நாடுகள் எதிர்க்கின்றது. அமெரிக்கா போன்று இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் சீனா உடைய ஆதிக்கம் மற்றும் அவர்களுடைய வணிகங்களை தங்களுடைய நாடுகளில் குறைத்து வருகின்றனர்.

இதற்கிடையே பாகிஸ்தான் மறைமுகமாக சீனாவிற்கு உதவி வருகிறது, மேலும் சீனாவிற்கு தேவையான எண்ணெய் வழித்தடங்களை பாகிஸ்தான் வழியே அமைத்துள்ளது சீனா. இத்தகைய செயல்கள் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, யூனியன் பிரதேசங்களான லடாக் மற்றும் காஷ்மீர் எல்லைப்பகுதி ஒட்டி உள்ளதால் சீனா அத்துமீற வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் பெரிய கடன் நெருக்கடியில் உள்ளது இதில் முக்கியமாக சீனாவிடம் பெரிய கடன்பிரச்சனையில் சிக்கியுள்ளது. இதை சாதகமாக கொண்டு சீனா பயன்படுத்தி வருகிறது.

இத்தகைய செயல்களினால் வல்லரசு நாடான அமெரிக்கா மற்றும் உலக நாடுகளும் பாகிஸ்தானை ஓரங்கட்ட முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானை வைத்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா.

Similar News