இந்தியாவுக்காக வென்டிலேட்டர்கள்; மருத்துவ கருவிகளை நன்கொடையாக கொடுத்த பிரான்ஸ்.!

இந்தியாவுக்காக வென்டிலேட்டர்கள்; மருத்துவ கருவிகளை நன்கொடையாக கொடுத்த பிரான்ஸ்.!

Update: 2020-07-29 07:45 GMT

இந்தியாவிற்காக வென்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவ கருவிகளை நன்கொடையாக பிரான்ஸ் நாடு கொடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு அமெரிக்கா முதற்கட்டமாக 100 வென்டிலேட்டர்களை இலவசமாக கொடுத்தது இதனை தொடர்ந்து இஸ்ரேல் சமீபத்தில் 50 வென்டிலேட்டர்கள் கொடுத்தது.


தற்போது பிரான்ஸ் நாடு இந்தியாவிற்காக ஓசிரிஸ்-3 வென்டிலேட்டர்கள் 50 எண்ணிக்கையும் மற்றும் யுவெல் 830 ரக வென்டிலேட்டர்கள் 70 எண்ணிக்கையும் கொடுத்துள்ளது.



இதன் பின்னர் 50 ஆயிரம் IgG/IgM test kits மற்றும் 50 ஆயிரம் 50k nose & throat swabs ஆகியவற்றறை இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லீனாய்ன் இந்திய செஞ்சிலுவை பொது செயலாளர் ஆர்.கே. ஜெயின் இடம் கொடுத்துள்ளார். 



Similar News