ரஷ்யா தயாரித்த நான்கு கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானது - ரஷ்ய பிரதமர் தகவல்.!

ரஷ்யா தயாரித்த நான்கு கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானது - ரஷ்ய பிரதமர் தகவல்.!

Update: 2020-07-23 07:51 GMT

ரஷ்யாவில் உற்பத்தி செய்து கொண்டிருக்கும் நான்கு கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்பதை பரிசோதனை செய்ததில் நிரூபிக்கப்பட்டுள்ளது என ரஷ்யா பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் தெரிவித்துள்ளார்.

இதனை பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய அவர் கூறியது: ரஷ்யாவில் உள்ள 17 ஆராய்ச்சி மையங்களில் கொரோனாவை அழிக்கும் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் வேலைகள் நடந்து வருவதாகவும் அதில் 26 வகையான தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா நாட்டின் நுகர்வோர் உரிமைகள் மற்றும் மனித நல்வாழ்வு பற்றிய கண்காணிப்புக்கான பெடரல் சேவையின் படி நான்கு தடுப்பூசிகள் பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுள்ளது என ரஷ்யா பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் தெரிவித்தார்.

https://twitter.com/RusEmbSriLanka/status/1285923262292086784

மேலும், இரண்டு தடுப்பூசி மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கின்றன எனவும் அதனின் பரிசோதனை விரைவில் துவங்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

Similar News