ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்த ஐந்து இந்திய வீரர்கள்.!

ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்த ஐந்து இந்திய வீரர்கள்.!

Update: 2020-07-23 10:58 GMT

சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக பல நூறு சதங்களை இந்திய வீரர்கள் அடித்துள்ளனர். அப்படி சதங்கள் அடிக்கப்பட்ட முதல் இரண்டு இடங்களில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருக்கின்றனர்.

தற்போது குறைந்த பந்துகளில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர்களை பார்ப்போம்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் சிறப்பாகவும் அதிரடியாக விளையாடி வருகிறார். 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் சதத்தை அடித்துள்ளார். அந்தப் போட்டியில் இந்திய அணி 360 ரன்களை பெற்றது. இதனால் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் மிக அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக். இவர் 2009 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் 60 பந்துகளில் சதமடித்தார். இதனால் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

தற்போது மூன்றாவது இடத்திலும் இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி தான் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 52 பந்துகளில் சதம் அடித்த 14 நாட்களில் மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 61 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்தார்.

இந்தியா அணியின் இடதுகை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 61 பந்துகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். இவர் 1997 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக 62 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.

இவர்கள் தான் இந்திய அணிக்காக குறைந்த பந்துகளிலும் மற்றும் அதிவேகத்திலும் சதம் அடித்துள்ளனர்.

Similar News