ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட உத்தரவு! அமெரிக்கா- சீனா இடையே வலுக்கும் மோதல்!

ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட உத்தரவு! அமெரிக்கா- சீனா இடையே வலுக்கும் மோதல்!

Update: 2020-07-22 12:34 GMT

ஹூஸ்டனில் உள்ள சூட தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சீன நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் அரசுக்காக உளவு பார்ப்பதாகக் கூறி சமீபத்தில் டிக் டாக்கை தடை செய்யுமாறு செனேட்டர்கள் குழு பரிந்துரை செய்தது.

சில நாட்களுக்கு முன் அமெரிக்க ஆய்வகங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் பணி புரிந்த சீனர்கள் பலர், முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களையும் ஆய்வு மாதிரிகளையும் திருடுவதாக கைது செய்யப்பட்டனர். தற்போது கோவிட்-19 வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து குறித்த ஆய்வத் தகவல்களைச் சீனா ஹேக்கர்கள் மூலம் திருட முயற்சிப்பதாக வேறு அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் ஹூஸ்டன் மாகாணத்தில் உள்ள சீன தூதரகத்தைக் காலி செய்யுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூதரக வளாகத்தில் ஆவணங்கள் எரிக்கப்படுவதாகக் கூறி தீயணைப்பு மற்றும் காவல் துறையினர்‌ அழைக்கப்பட்டனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹூஸ்டன் காவல்துறையும் தனது ட்விட்டர் பக்கத்தில் புகை வெளிவந்ததைப் பார்க்க முடிந்தது எனவும் எனினும், தாங்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளது.

அமெரிக்காவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர், இந்த உத்தரவைத் திரும்பப் பெற விட்டால் சீனா தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

Similar News