பாலிவுட் திரையுலகில் புறக்கணிக்கப்படும் இசைப்புயல் ஏ. ஆர்.ரகுமான், இவருக்கே இந்த நிலைமையா - என்ன நடக்கிறது பாலிவுட்டில் ?

பாலிவுட் திரையுலகில் புறக்கணிக்கப்படும் இசைப்புயல் ஏ. ஆர்.ரகுமான், இவருக்கே இந்த நிலைமையா - என்ன நடக்கிறது பாலிவுட்டில் ?

Update: 2020-07-26 03:41 GMT

பாலிவுட்டில் தென்னிந்தியர்கள் பாலிவுட் சினிமாவில் ஆளுமை செய்வதை விரும்பாதவர்கள் பலர் உள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் ஒரு வானொலி நிகழ்ச்சியில் பேட்டி அளித்துள்ளார். அதில் பாலிவுட்டில் தான் பணியாற்றுவதற்கு எதிராக, தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தட்டிப் பறிக்க ஒரு கூட்டமே செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள "தில் பேச்சாரோ" படத்தின் இயக்குனர் தன்னை சந்திக்க வந்த போது, எனக்கு அந்த வாய்ப்பை தர வேண்டாம் என்று சிலர் தடுத்துள்ளனர். 28 ஆண்டுகளான தனது இசைப் பயணத்தில், பாலிவுட்டில் குறைந்த அளவு படவாய்ப்புகளே கிடைத்தது. மேலும் தமிழரான ஏ.ஆர்.ரஹ்மான் "ஆஸ்கர் விருது" பெற்ற பின்னர், அவர் பணியாற்றிய இந்திப் படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதே என்கிறார்.

தமிழர் என்பதைவிட பாலிவுட்டில், என்ன பிரச்சினை என்றால் தென்னிந்தியர்கள், பாலிவுட் சினிமாவில் ஆளுமை செய்வதை விரும்பாதவர்கள் பலர் உள்ளனர். அவர்களால் தான் ரஹ்மானின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளமுடியாமல், அவருடைய பட வாய்ப்புகளை கெடுப்பதாக, அவரது சகோதரி ஏ.ஆர்.ரெஹானா மனம் வருந்தி உள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமல்ல, யேசுதாஸ், வாணி ஜெயராம் போன்ற தென்னிந்திய கலைஞர்களையும் பாலிவுட் புறக்கணித்ததாக இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தீனா கூறியுள்ளார். ஒருவர் குறித்து புரளியை பரப்பி அவருக்கான வாய்ப்பை கெடுக்கும் மோசமான செயல்தான் இந்தி சினிமாவின் மிகப்பெரிய பிரச்னை என்றனர். ஏ.ஆர்.ரஹ்மானும் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. வருத்தமளிப்பதாகவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.

Similar News